Friday, March 7, 2014

எழுதுகோலும் நமக்கு ஓர் குருவே!

       நாம் எழுதும் பேனா, பென்சில், சிலேட்டுக்குச்சி எல்லாமே ஓர்ஆசிரியர். எப்படி தெரியுமா? தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையுமே மிச்சமில்லாமல் அது கொடுத்து விடுகிறது. நல்லது எழுதுகிறானா, நல்லவன் எழுதுகிறானா, என்பதையெல்லாம் அது பார்ப்பதில்லை. அந்த எழுதுகோல்கள் நமக்கு எதை புரிய வைக்கிறது தெரியுமா? தான் வந்த நோக்கம் என்னவோ அதை எந்தக்குறையும் இல்லாமல் செய்து முடிக்கவேண்டும். அதனுடைய பலாபலன்களை எதிர் பார்க்கக்கூடாது. நினைத்துப்பார்த்தால் எத்தனை ஆச்சர்யமாக இருக்கிறது. நம்மையும் பற்று வைக்காமல், எதிர் பார்ப்பு இல்லாமல் கடமையை செய், என்று சொல்கிறது அது. 
     இன்னொரு விஷயம் - அது பேப்பரை நோக்கி குனியும்பொழுதுதான் எழுதும்; நிமிர்ந்தால் எழுதாது. அது போல் பணிவுடன் நாம் இருந்தால் மற்றவர்களுக்கும்  நம்மால் பலன் உண்டு. அவர்களும் நம்மை மதிப்பார்கள். நிமிர்ந்து ஆவணமாக இருந்தால், எவராலும் மதிக்கப்படவும் மாட்டோம், எவருக்கும் பயன்படவும் மாட்டோம். எத்தனை அழகான அறிவார்த்தமான சொற்கள்!

1 comment:

  1. அழகாக சொன்னீர்கள்.மரங்களும் தன்னுடைய நிழலையோ அல்லது காய் கனிகளையோ நல்லவனா துஷ்டனா என்று ஒரு வித பாரபக்ஷமில்லாமல் பிரதி பலனை எதிர் பாராது கொடுப்பது போல உள்ளது நீங்கள் கொடுத்த உதாரணங்கள். அருமையான நல்ல விஷயத்தை எடுத்து கூறும் பதிவு

    ReplyDelete