Sunday, June 8, 2014

ஆச்சர்யம், அதிசயம்,அற்புதம், ஆனந்தம்.

                          ஆச்சர்யம், அதிசயம்,அற்புதம், ஆனந்தம்.
   எங்கள் மகன் ராஜுவுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்து, அவன் அங்கு  செல்வதற்கு ஒரு வாரம்தான் இருந்தது.அங்கு செல்வதற்கு முன் நான்கு நாட்கள் சென்னையில் டிரெயினிங் வேறு. அவன் சென்னை சென்ற பிறகு எங்களுக்கு போன் செய்து, அமெரிக்கா போவதற்கு முன் நாம் எல்லோருமாக திருப்பதிக்கு சென்று ஶ்ரீ வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய வேண்டும் என்று சொன்னான்.எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம்.வருகிறோம்

என்றோம்.இரண்டு நாட்களில்நாங்கள்என் மருமகள்,பேத்தி,எங்கள் சம்பந்திகள் எல்லோரும்
திருச்சியிலிருந்து கிளம்பி சென்னை வந்து சேர்ந்தோம்.சென்னையில் இன்னும் இரண்டு உறவினர்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். எல்லோருக்கும் ராஜு (பஸ்ஸில் சென்று வரவும்,அவர்களே ஒரே நாளில் ஶ்ரீ வெங்கடாசலபதியையும்,தரிசனம் செய்து வைத்து விடுவதாகவும் சொன்னதைக்கேட்டு) டிக்கெட் புக் செய்து விட்டான்.மறுநாள் இரவு அவனுக்கு அமெரிக்கா செல்ல வேண்டும்.
       திருப்பதி மலைமேல் போய் சேர்ந்ததும் தான் தெரிந்தது, தரிசனம் கிடைக்க இன்னும்
குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும் என்பது.எங்களுக்கு மிகவும் கவலையாகிவிட்டது பெருமாளை தரிசிக்க முடியாமல் போய்விடுமோ? என்று. என்ன சோதனை நாங்கள் எவ்வளவு ஆவலாக வந்தோம் தரிசனம் செய்ய,மனதில் கவலையுடன் கோவிலை வலம் வந்து கொண்டிருந்தோம். நமக்குத்தெரிந்தவர்கள் யாரேனும் வருகிறார்களா? என்று நான் எல்லா
இடங்களையும் சுற்றிப்பார்த்துக்கொண்டே வந்தேன்.இங்கும் உனக்குத்தெரிந்தவர்கள் வரப்போகிறார்களா என்று கேட்ட கணவரிடம் எனக்கு என்னவோ தோன்றுகிறது பார்க்கிறேன், என்று சொல்லியபடி நானும் இவ்வளவு பெரிய கூட்டத்தில் யாராவது இருக்க மாட்டார்களா என்று சுற்று முற்றும் பார்த்தேன்.நான் எதிர் பார்த்தது வீண்போகவில்லை.

     
       
          "ஆச்சர்யம்"எங்கள் எதிரில் என் அக்காவின் பெண்ணும்,மாப்பிள்ளையும்,வந்து கொண்டிருந்தார்கள்.சிறிது நேரம் அவர்களிடம் பேசிய பிறகு,எங்களுக்கு இன்று தரிசனம் கிடைக்காது போல் இருக்கிறது.ராஜூவுக்கு நாளைக்கு அமெரிக்கா செல்ல வேண்டும்.
என்ன செய்வது என்று தெரியவில்லை,என்று மிகவும் வருத்தமுடன் சொன்னோம்.அவர்களும்
கொஞ்ச நேரத்தில் கிளம்பி சென்று விட்டார்கள்.நாங்களும் இன்று கொடுத்து வைத்தது அவ்வளவு தான், கோபுரதரிசனமாவது கிடைத்ததேஎன்று மனதை சமாதானம் செய்து
கொண்டு செருப்பு வைக்கும் இடம் நோக்கி சென்று கொண்டிருந்தோம்.இந்தக்கூட்டத்தில் எப்படிஅவர்களை பார்த்தோம் என்பதே ஓர் ஆச்சர்யம்.
          " அதிசயம்" பின்னால் இருந்து யாரோ கூப்பிடுவது போல் இருக்கவே திரும்பி
பார்த்தோம்.அங்கு என் அக்காவின் மாப்பிள்ளை வேகமாக வந்து கொண்டிருந்தார்.
 என்ன ஆயிற்று என்று கேட்டேன்,அதற்கு அவர் இந்த டிக்கெட்டைகளை உங்களிடம்
கொடுப்பதற்கு தான் வந்தேன்.காலையில் நாங்கள் திருக்கல்யாண உத்ஸவம் செய்தோம் அப்பொழுது நாங்கள் ஏழுமலையானை மிகவும் நன்றாக தரிசனம் செய்து விட்டோம்.இதில் நான்குபேர் உள்ளே சென்று பெருமாளை தரிசிக்கலாம்என்றார்.பிறகு அவர் இதையும் சொன்னார்.( என் அக்கா,அத்திம்பேருடன் தான் நாங்கள் வந்தோம்.அவர்களிடம் தான் டிக்கெட்டுகள் இருந்தது.அதில் சாயங்காலசேவை உண்டாஎன்று டிக்கெட்டை பார்த்து
தெரிந்து கொண்டு பிறகு உங்களிடம் கூறலாமே என்றுதான் அப்பொழுதே நான் ஒன்றும்
சொல்லவில்லை என்றார்.) எங்களுக்கு அவசர வேலை இருப்பதால் நாங்கள் இப்பொழுதே சென்னைக்கு கிளம்ப வேண்டும்.என்று சொல்லிவிட்டு டிக்கெட்களைக் கொடுத்தார்.
            அவருக்கு நாங்கள் எல்லோரும் ஒரு முகமாக எங்கள் நன்றியையும் தெரிவித்துவிட்டு டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டோம்.அப்பொழுது நாங்கள் அடைந்த  சந்தோஷத்தை
வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் ஒன்றுமே கிடைக்கவில்லை.இப்படியும் ஓர் இன்பமயமான
அதிசயமா?
        "அற்புதம்" அன்று முக்கியமான நாங்கள் நான்குபேர் சென்று ஶ்ரீவெங்கடாசலபதியை
தரிசிப்பது என தீர்மானித்தோம்.மற்றவர்கள் பிறகு சேவிக்கலாம் என்று முடிவாயிற்று.
நாங்கள் சாயங்கால சேவைக்கு செல்லுமுன் ஶ்ரீவராக ஸ்வாமியை தரிசித்துக்கொண்டோம்.
அங்கிருந்து வந்து தரிசனத்திற்கான கியூவில் நின்று கொண்டோம். அரைமணி நேரத்தில் எங்களுக்கு திவ்யமாக தரிசனம் கிடைத்தது. அப்பப்பா என்ன ஓர் கண் கொள்ளாக்காட்க்ஷி.
எப்படிப்பட்ட பட்ட சேவை. எங்களுக்கு இப்படி ஓர் தரிசனம் கிடைக்கும் என்று நாங்கள் எதிர் பார்க்கவே இல்லை. மீண்டும்,மீண்டும், நினைத்துப்பார்த்துப் பரவசம் அடைந்தோம் நாங்கள்.இப்படியும் ஓர் அற்புதமா?
     "ஆனந்தம்"ஶ்ரீகோவிந்தனின் அருளாளும்,அவரின் கிருபை எங்களுக்கு இருந்ததாலும்,
 எங்களால் அவரை மனமார தரிசிக்க முடிந்தது.இப்படி ஆச்சர்யம்,அதிசயம்,அற்புதம், எல்லாவற்றையும் ஒரங்கே ,அளித்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது ஓர் ஆனந்தமே!
        மற்றவர்களும் இன்னொருநாள் சென்று ஶ்ரீஏழுமலையானைஆனந்தமாக தரிசித்தார்கள்
என்பதை சொல்லவும் வேண்டுமா? இது 2000ஆம் ஆண்டு நடந்த சம்பவம்.
ஶ்ரீ ஏழுமலையானின் கருணா கடாக்‌ஷம் இருந்தால் எதுவும் எப்பொழுதும் நடக்கலாம் .



     


   

     

No comments:

Post a Comment