Friday, July 13, 2012

தீபமங்கள ஜோதியே ஶ்ரீலக்ஷ்மி



தீபமங்கள ஜோதியே ஶ்ரீலக்ஷ்மி திருமால் மார்பில் உறையும் தேவி 
துதி செய்தோர்க்கு உன்னை துதி செய்தோர்க்கு துயர் பிணிபோக்கிடும் தாயே  
தீபமங்கள ஜோதியே  ...
அஷ்ட ஐஸ்வர்யம் அளித்து என்றும் அருள்வழி தனில் எமை நடத்தியே 
நித்தமும் எம்மோடு  நிலைத்து நின்றே  நிறைவான வாழ்வை எமக்களிப்பாயே  
தீபமங்கள ஜோதியே ...

பாஹி பாஹி நரஸிம்மா

பாஹி பாஹி நரஸிம்மா
பக்தபரிபாலா நரஸிம்மா

பிரகலாதவரதா நரஸிம்மா
பதிதபாவன நரஸிம்மா

சிம்மரூபா நரஸிம்மா
சங்கடஹரணா நரஸிம்மா

கமலநாபா நரஸிம்மா
கருடவாஹன நரஸிம்மா

நரஸிம்மா ஹரி நரஸிம்மா 
 நரஸிம்மா லஷ்மி நரஸிம்மா 
 நரஸிம்மா லஷ்மி நரஸிம்மா

Thursday, July 12, 2012

ரகுகுல ராமா


ராமாராமா ரகுகுல ராமா ஹே
தசரதகுமாரா ஹே தீனபந்தோ
பக்தபரிபாலா பரமதயாளா ஹே
கோசலபுத்ரா ஹே கோதண்டராமா
மாருதிசேவித மன்மதரூபா ஹே
ஜானகிநாயகா ஹே சாந்தசீலா
தசமுகமர்த்தன தசஅவதாரா
ஹே தீனபந்தோ ஹே தீனபந்தோ ஹே தீனபந்தோ

சரணம் கணேசா





சம்புகுமாரா சரணம் கணேசா ஜெய 
சங்கரிபாலா சரணம் கணேசா 
மூலாதார சரணம் கணேசா 
மூஷிகவாகனா சரணம் கணேசா 
ஏகதந்தா சரணம் கணேசா 
லம்போதரா சரணம் கணேசா 
சம்புகுமாரா சரணம் கணேசா ஜெய 
சங்கரிபாலா சரணம் கணேசா 


கஜவதனா சரணம் கணேசா 
கருணாசாகரா சரணம் கணேசா 
வக்ரதுண்டா சரணம் கணேசா 
வரப்பிரஸாதி சரணம் கணேசா 
சம்புகுமாரா சரணம் கணேசா ஜெய 


சங்கரிபாலா சரணம் கணேசா சங்கரிபாலா சரணம் கணேசா சங்கரிபாலா சரணம் கணேசா

என் அருமை செல்வனே கண்ணா





என் அருமை செல்வனே இன்னமுதே கண்ணா நீ 
வெண்ணெய் திருட சென்றாயோ வேரெங்குசென்றாயோ 


வெண்ணெய் திருடி தின்னும் இன்பம் வேரெதிலும் இல்லை அம்மா 
என்னை என்ன செய்யுமுடியும் எப்படியும் நான் தப்பிடுவேன் 


கண்மணி நான் உனக்கு கை நிறைய வெண்ணெய் தருவேன் 
ஏன் இந்த பொல்லாப்பு யாரிடம் நான் முறையிடுவேன் 


நீ கொடுக்கும் வெண்ணெய் எனக்கு தேனாய் இனிக்கும் அம்மா 
நான் திருடி தின்னும் வெண்ணெயில் மர்மம் பல இருக்குதம்மா 


அடுத்தவீட்டு ஆய்ச்சியிடம் அடிவாங்கி வந்தாயோ நீ 
பக்கத்து வீட்டு பாட்டியின் பழிச்சொல்லை கேட்டாயோ 


அடிவாங்க நான் என்ன அறியாதவனா அம்மா 
தடி எடுக்குமுன் தானும் ஓடி ஒளிந்திடுவேன் தாயே 


பேதை நான் என்ன செய்வேன் பெற்றமனம் பதைபதைக்க 
காதை பொற்றி கொண்டு நானும் எத்தனை நாள் இருந்திடுவேன் 


ஏன் இந்த கவலை அம்மா என்னை உனக்கு தெரியாதா 
நான்தான் அந்த கள்வன் என்று நாலு பேரிடம் எடுத்து சொல்வேன்

என் அருமை செல்வனே இன்னமுதே கண்ணா நீ 
வெண்ணெய் திருட சென்றாயோ வேரெங்குசென்றாயோ 

எத்தனை இன்பங்களை

நீரும் நிலம் நெருப்பும் அதனுடன் வான் வாயுவும் இன்னும் பலவும் 
எமக்களித்து இன்னலற்ற வாழ்வையும் கொடுத்திட்ட 
தன்நிகரில்லாத இறைவா உத்தமா உன்தன்னை
நான் என்னவென்றுபுகழ்ந்துபாடிடுவேன் ஐயா 

எத்தனை எத்தனை இன்பங்களோ இவ்வையமதில் 
அத்தனையும் பேர் இன்பமயமே இறைவன் நமக்களித்த (எத்தனை)

ஆதவன் உதிப்பது தினம்தினம் இன்பம் அந்த 
அலைகடலும் மலையும் கண்டுகளிப்பது இன்பமே (எத்தனை)

பசுமையான பலமரங்களும் புல்லினமும் இன்பம் 
பரந்திருக்கும் இந்த பேருலகமும் இன்பமே (எத்தனை)

அழகாய் சிரிக்கும் மழலையின் குரல் இன்பம் 
அனுதினமும்மலரும் அந்த பூக்களும் இன்பமே (எத்தனை)

ஆவினங்கள் அசைந்து ஆடிவருவது இன்பம் 
ஆடிடும் மயில்களும் கூவிடும் குயிலினமும் இன்பமே (எத்தனை) 

வண்ணமயமாய் தோன்றும் வானவில்லும் இன்பம் 
வண்டினங்களின் அந்த ரீங்காரமும் இன்பமே (எத்தனை) 

மண்ணில் பேரின்பமுடன் நாம் வாழ்ந்திடவே 
எண்ணில் அடங்காத எத்தனை இன்பங்கள் 
இன்னும் பல இன்பங்களை எமக்களித்த இறைவா
என்றும் உன்னை பரவசமாய் பாடுதல் பேரின்பமே (எத்தனை)