Wednesday, March 5, 2014

அன்பே சிவம்

           நாம் இந்த பூமியில் இருப்பது ஒரு சத்திரத்தில் சிறிது நாட்கள் தங்கி விட்டு வேறு இடத்திற்கு செல்வது போல் தான். அந்த கொஞ்ச காலங்களில் ஏன் இந்த போட்டி, சண்டை, கோபம், ஆத்திரமெல்லாம். சின்ன விஷயங்களுக்கெல்லாம் அனாவசியமாக சண்டை போட்டு நம் நிம்மதியையும் கெடுத்துக்கொண்டு அடுத்தவர் நிம்மதியையும் கெடுத்து, இதெல்லாம் அவசியமா நினைத்துப் பார்த்தால் இது  எல்லாமே அனாவசியம் என்பது புரியும். நாம் ஏன் இப்படி இருந்தோம், என்று நினைத்து, வருத்தப்படுவோம். இது நமக்குத்தேவையா?
           நம்மால் முடிந்தவரை யாருடனும் சண்டை போடாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அன்பாகவும், ஆசையாகவும் இருக்கவேண்டும். அன்பு ஒன்றே ஆனந்தமயமான வாழ்க்கைக்கு ஆதாரம். நாம் முயற்சி செய்துதான் பார்ப்போமே.

அன்பே சிவம் என்று
ஆராதனை செய்து 
இன்புற்றிருக்க
ஈசனே என்றும்
உன்னை வேண்டுகிறேன்
ஊக்கம் அளித்து
எனது ஆசையை
ஏற்றுக்கொண்டு
ஐம்புலன்களையும் அடக்க
ஒரு நல்லவாய்ப்பளித்து
ஓய்வு இல்லாமல்
ஔடதமென 
உன் பெயரை தியானிக்க அருள்வாய்! 
நீ என்றும் அருமருந்தே!
                                     



1 comment:

  1. "அன்பு ஒன்றே ஆனந்தமயமான வாழ்க்கைக்கு ஆதாரம்"
    சரியான வார்த்தைகள்.கவிதையும் மிகவும் நேர்த்தியாக இருந்தது.நன்றி

    ReplyDelete