Monday, August 17, 2015

பொங்கிடுமே இன்பம்

இன்பம் பொங்கிடுமே இசையினால் எங்குமே பேர்
இன்பம் பொங்கிடுமே பேர் இன்பம் பொங்கி பெருகிடுமே
அதிகாலை கோழிகள் கூவுவதும் ஓர் இன் இசையே
அந்த செடிகள் தென்றலில்அசைந்தாடும் ஒலியும் இசையே
அங்கோர் குருவி கொத்தும் ஓசையில் உள்ளதும் இசையே
அந்த காக்கைகள் கூடி உண்ணும் சத்தமும் இசையே ( இன்பம்                                                  சின்னக்குழந்தை தன் மழலை மொழியால்பேசுவது ஓர்இசையே  
சின்னங்சிறு வண்டுகள் அங்கு ரீங்காரமிடுவதும் இசையே.
வனத்தில் மிருகங்கள்  உருமுவதும் ஓர் இன் இசையே
வானத்தில்மேகங்கள் மழையாய் பொழிவதும் இசையே( இன்பம்)

எங்கும் பரந்திருக்கும் கடலின் அலை ஓசையும் இசையே
எங்கு தட்டினாலும் உண்டாகும் நாதமும் ஓர் இசையே
எண்ணற்ற மொழிகளில் நாம் பேசுவதும் இனிய இசையே
எண்ணிலடங்கா இன்பம் தருவதும் என்றும் அந்த இசையே
இன்பம் பொங்கிடுமே இசையினால் எங்குமே பேர்
இன்பம் பொங்கிடுமே பேர் இன்பம் பொங்கி பெருகிடுமே
இயற்கை நமக்களித்த ஒலிகளிலெல்லாம் இருப்பதும் இசையே
இன்ப இசையே பேரின்ப இசையே என்றுமே பேரின்ப இசையே
என்றுமே பேரின்ப இசையே என்றுமே பேரின்ப இசையே.

2 comments:

  1. இயற்கையில் உண்டாகும் எல்லா ஓசையும் ஓர் இன்னிசையே.அதை நாம்
    அணுகும் பக்குவத்திலும் இறை நம்பிக்கையிலும் உள்ளது. உங்கள் கவிதையை படிக்கும்போதே நம் மனம் இசையில் ஆழ்ந்துவிடுகிறது.

    ReplyDelete
  2. நன்றி, நீங்கள் ஊக்கப் படுத்துவதால் தான் எனக்கு நிறைய எழுத தோன்றுகிறது

    ReplyDelete