Friday, August 14, 2015

கோதையின் கனவு

நீலநிற பாலகன் ஒருவன் என், நித்திரையில் வந்து மாயம் செய்கிறான்.                    
கேளடி தோழி நான் சொல்வதை, அந்த பாலகன் யார் என்று கூறிடு நீ  
                          
ஆலின் இலையில்உறங்கியவனாம், அவனுக்கு அன்னைகள் இருவர்களாம்
ஆயர்பாடியில் வளர்ந்தவனாம், அரக்கியின் உயிரையே மாய்த்தவனாம்
மண்ணை உண்ட மாயவனாம் ,உறி வெண்ணெயும் திருடிய கள்வனாம்.                                   கோலமயில் சிறகணிந்தவனாம் ,குழல் ஊதி மயக்கும் சியாமளனாம்                        

நீலநிற பாலகன் ஒருவன் என்,நித்திரையில் வந்து மாயம் செய்கிறான்.                      
கேளடி தோழி நான் சொல்வதை , அந்த பாலகன் யார் என்று கூறிடு நீ.
                       
மலைதூக்கிஆயர்களை காத்தவனாம்,காளிங்கன்மேல் நடனம் ஆடியவனாம்
தாயினால் உரலில் கட்டுண்டவனாம்,ஆனிரைகளையும் மேய்த்தவனாம்
கன்னியர்உடைகளை ஒளித்துவைத்தே , களிப்புடன்கைகொட்டிசிரித்தவனாம்                      அசுரன்கள்பலரையும் கொன்றவனாம்,யானைக்கும் திருவருள் புரிந்தவனாம்                        

நீலநிற பாலகன் ஒருவன் என்,நித்திரையில் வந்து மாயம் செய்கிறான்.                                           கேளடி தோழி நான் சொல்வதை , அந்த பாலகன் யார் என்று கூறிடு நீ    
             
பாண்டவர்க்கு தோழனாம் அவன், பார்புகழ் கீதையின் நாயகனுமாம்.                          
சேவைகள் பலவும் புரிந்தவனாம், அவன் சாரதியாயும் இருந்தவனாம்.                                                                                நூற்றியெட்டு திருப்பதிஅவனுக்குண்டாம், அரங்கம்தான் அதில் முதலாவதாம்
அலங்காரப் பிரியனான அவனுக்கு ஆயிரம் நாமங்கள் உள்ளனவாம்

நீலநிற பாலகன் ஒருவன் என்,நித்திரையில் வந்து மாயம் செய்கிறான்.
கேளடி தோழீ நான் சொல்வதை , அந்த பாலகன் யார் என்று கூறிடு நீ.                                              

அறிந்து கொண்டேன் தோழி நான் அவனை,மாயங்கள் புரியும் மன்னவனை.                      பார்க்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன், அவன் தான் நீ சொல்லும் நாராயணன்
நாராயணா, ஹரி நாராயணா, ஶ்ரீமந் நாராயணா, லக்ஷ்மி நாராயணா,
பாஹி நாராயணா, ஜபோ நாராயணா, பஜோ நாராயணா, சத்ய நாராயணா.

4 comments:

  1. மிக்க அருமையான கவிதை.கண்ணனின் கதையையே ரொம்ப நேர்த்தியாக வடித்து விட்டீர்கள்.
    அடிக்கடி எழுதக்கூடாதா?இவ்வளவு திறமை ஏன் குட விளக்காய் மறைந்து இருக்கவேண்டும்?

    ReplyDelete
  2. மிக்க நன்றி மாமா நிறைய எழுதி வைத்திருக்கிறேன், முடிந்தபொழுது அனுப்புகிறேன்

    ReplyDelete
  3. பிரமாதமா இருக்கு உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நீலா குமார்

      Delete