Wednesday, December 4, 2013

ஶ்ரீ ஆண்டாள் பொன் மலரடிகளே சரணம்

அழகு மிக்க வனம் அமைத்து அதில் மலரும் மலரை பறித்து  
அரங்கனுக்கு மாலைகட்டி அகம் மகிழ்ந்தார்  பெரியாழ்வார்
        மாலுக்கு மாலைகள் கட்டி மகத்தான பணி செய்து வந்த
        மஹானுக்கு மகளாய் துளசி வனத்தில் கிடைத்தால் பூதேவி
பொன்மலர் பூத்தது போல் பூ மகளை கண்ட ஆழ்வார்  
பூக்களோடு பூவாய் அணைத்து பூரித்து ஆனந்தம் கொண்டார்
        நித்தமும் தான் வணங்கும் வித்தகனாம் அந்த ரங்கன் 
        சித்தம் மகிழ்ந்து தனக்களித்த வித்தையை நினைந்து  மகிழ்ந்து
கோடிசூர்ய பிரகாசமுடன் ஆடிப்பூரத்தில் பிறந்தபெண்ணிற்கு
கோதை என்று பெயர் சூட்டி ஆடிப்பாடி களித்தாராம்
        குழந்தைகோதை குமரி ஆகி குடம் குடமாய் தண்ணீர் ஊற்றி 
        குலுங்கிய மலர்களை பறித்து  ரங்கனுக்கு மாலை கட்டி மகிழ
ஆழ்வாரின் இல்லம் வரும் அடியார்கள் அனைவரும் 
அந்த ரங்கன் புகழ் பாடக்கேட்டு ஆனந்தம் மிக அடைந்தாள்
        மணப்பருவம் அடைந்த மங்கை மாயனான அந்த ரங்கனை
        மனாளனாய் தனக்கு வரித்துக் மனதில் கனவு பலவும் கண்டாள்
காதில் குண்டலம் மினுமினுக்க கழுத்தாரமும் கை வளைகளும் பளபளக்க 
நீலவண்ண சிற்றாடை கட்டி நெற்றியில் நீண்ட திலகமும் இட்டு 
        இடது பக்க கொண்டையில் விதவிதமாய் பூக்களை சுற்றி 
        இன்பமுடன் கண்ணாடியில் தன் முகத்தை யே பார்த்து ரசித்தே
அரங்கனின் மாலைகளை ஆவலுடன் பார்த்த கோதை - தான் 
அணிந்து பார்க்க ஆசை கொண்டு அரங்கனையே மனதில் நினைந்து
        மல்லிகைமாலை எடுத்தணிந்தாள் அதில் மஹாவிஷ்ணு முறுவலித்தார்
        மட்டற்ற மகிழ்ச்சி கொண்டாள் மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்
ரோஜாமாலை எடுத்தணிந்தாள் அதில் ரங்கராஜன் தோன்றி கண் சிமிட்ட 
சாமந்திமாலையில் பார்த்தசாரதி  புன்னகைத்தார்
        கோபாலனை ஆளவே அவள் கோபிகையாய் தானும்மாறி
        மார்கழி நோன்பிருந்து மாயவனை வழி பட்டாள்
என்றென்றும் தன்னுடன் அந்த ரங்கனையே அவள்கண்டாள் 
பாவை அவள் பூ மாலையுடன் திருப்பாமாலையும் தொடுத்தளித்தாள்
        அனந்தனை ஆட்கொண்டாள். ஆண்டாள் எனப்பெயர் பெற்றாள்
        ஆடிப்பூரத்தில் பிறந்த அந்த சூடிக்கொடுத்த சுடர்கொடி
சூடிக்கொடுத்தசுடர்கொடி அவள் சூடிக்கொடுத்தசுடர்கொடி
கோதை நாச்சியார் பொன் மலரடிகளே சரணம்!

2 comments:

  1. உங்கள் கவிதை மிகவும் நன்றாக அமைந்து உள்ளது.
    கோதை நாச்சியாரின் வாழிய நாமம் சொல்லி உங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

    திருவாடிபூரத்து செகத்துதித்தாள் வாழியே1
    திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
    பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!
    ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!
    உயரரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!
    மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே!-வண்புதுவை
    நகர்க்கோதை மலர்பாதங்கள் வாழியே!

    ReplyDelete
  2. நமஸ்காரம் மாமா . நீங்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்தி எழுத வைத்ததற்கு மிகவும் நன்றி. உங்கள் கமெண்ட்,என்னை மேலும் எழுத தூண்டுகிறது. பத்மா.

    ReplyDelete