கண்டேன் கண்டேன் காணக்கிடைக்காத கருணை வள்ளலை திருவரங்கத்தில் - நான்
அடியாரின் மனமதில் அமுதமாய் இனித்திடும் அந்த ரங்கன் பள்ளிகொண்ட கோலத்தை - நான்
கண்டேன் கண்டேன்..
பூலோக வைகுண்டமான புண்ணிய பூமியில் மாலோலன் அந்த வடமதுரை மாயவன்
மன்மத ரூபனாய் காட்ஷி அளிக்கும் அழகில் மயங்கியே என்தன் கவலையை மறந்து - நான்
கண்டேன் கண்டேன் ...
No comments:
Post a Comment