Tuesday, April 17, 2012

திருவரங்கத்து ஆனந்தம்


அரங்கம் என்றாலே ஆனந்தமே - திரு 
அரங்கத்தில் காண்பதெல்லாம் பேரின்பமே 
நால்வகை வேதங்கள் ஓதும் அந்தணர்கள் 
நிறைந்த நான்முகனைப்படைத்த ஶீதரன் - பள்ளிகொண்ட 
அரங்கம் என்றாலே ஆனந்தமே... 

அலைஅடித்தோடும் அகண்டகாவிரிகளும் 
கரையில் குலைகள் நிறைந்த இனியவாழைமரங்களும் 
பூஞ்சோலைகளும் பொய்கையில் தாமரையும்நிறைந்து 
நீலவண்ணனான எங்கள் ரங்கன் - பள்ளிகொண்ட 
அரங்கம் என்றாலே ஆனந்தமே... 

வெண்ணைதிருடி உண்ட வடமதுரை கள்வன் நப்   
பின்னையின் மனம் கவர்ந்த மாயவன் அங்கு 
கண்ணை பறிக்கும் பேரழகுடனே கனக மணி
வண்ணனாய் அனந்தன்மேல் - பள்ளிகொண்ட 
அரங்கம் என்றாலே ஆனந்தமே.... 

கூடகோபுரமும் மாடமாளிகையும் நிறைந்து 
குறையில்லா செல்வமுடன் என்றும் விளங்கிடும் 
தும்புரு நாரதரும் இனிய இசைஇசைக்க 
தாய் யஸோதையால் கட்டுண்டதாமோதரன்- பள்ளிகொண்ட 
அரங்கம் என்றாலே ஆனந்தமே ...

1 comment:

  1. அருமையான ஆனந்தமான கவிதை
    அரங்கனின் எல்லை இல்லா பேரழகை . சொல்ல வார்த்தைகள் போராது. பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கனை கண்ட கண்கள் வேறு எந்த வடிவத்தையும் காண விரும்பாது.
    கோவிலையும் அரங்கனையும் பின்னணியாக கொண்டு நிறைய கதைகள் புனையுங்கள்

    ReplyDelete