சிந்தனை செய்திடுவாய் மனமே - ஶ்ரீராமதாஸனை
வந்திடும் சங்கடங்கள் விலகிடவே - என்றும் நீ
சிந்தனை செய்திடுவாய் ...
தஞ்சம் அடைந்தோரை வஞ்சனையின்றி காக்கும்
அஞ்சனை மைந்தனை என்றும் மறவாமல் நீ
சிந்தனை செய்திடுவாய் ...
ஆதவனை கனியென்று நினைத்து பிடிக்கசென்ற
ஆஜானுபாவன் அந்த அற்புத குணசீலன்
சஞ்சீவி மலையை சாகசமாகவே தூக்கிய
சிரஞ்சீவியான கேசரி நன்தனை மனதில் நீ
சிந்தனை செய்திடுவாய் ...
No comments:
Post a Comment