பங்கஜவாஸினி ஶ்ரீசரஸ்வதி - பக்தர்கருளும் ஶ்ரீசரஸ்வதி
நங்கையர் துதிக்கும் ஶ்ரீசரஸ்வதி - நலங்களை அருளும் ஶ்ரீசரஸ்வதி
தாமரையில் அமர்ந்த ஶ்ரீசரஸ்வதி - தஞ்சம் அடைந்தோம் ஶ்ரீசரஸ்வதி
வீணையை ஏந்திய ஶ்ரீசரஸ்வதி - வேண்டும் வரம்தரும் ஶ்ரீசரஸ்வதி
கல்விக்கு அதிபதியே ஶ்ரீசரஸ்வதி - காத்தருள்வாயே ஶ்ரீசரஸ்வதி
மனதார வேண்டினோம் ஶ்ரீசரஸ்வதி - மங்களங்கள் தருவாய் ஶ்ரீசரஸ்வதி
பங்கஜவாஸினி ஶ்ரீசரஸ்வதி ... சரஸ்வதி ...
No comments:
Post a Comment