ஆடினாளே ராதை ...
அழகனுடன் ஆடினாளே ராதை
மிக ஆனந்தமாகவே ஆடினாளே ராதை
பிருந்தாவனம் தனில் ஆடினாளே ராதை
கோபியர் யாவரும் தாபமுடன் பார்த்திருக்க
கோலாகலமாகவே அங்கு மாதவனின் கைபிடித்து
ஆடினாளே ராதை ...
வானோரும் மண்ணோரும் வாழ்த்தி வணங்கிட
மாயவன் கள்வன் யஸோதை செல்வனுடன்
ஒய்யாரமாகவே கண்ணனின் கைகோர்த்து
தாதை தளாங்குதக ததிங்கிண தோம் என்று
ஆடினாளே ராதை ...
No comments:
Post a Comment