மாருதியை தினம் மனதில் நினைப்போர்க்கு
மனசஞ்சலங்கள் எல்லாம் மறைந்திடுமே - வீர
காரியசித்தி பெற்று கவலைகள் மறைந்து நம்
கனவுகள் கைகூடி களிப்புடன் என்றும் இருக்க
வாயுகுமாரனான அந்த சுந்தரரூபனை
வானர வீரனை வரப்பிரஸாதியை
என்றும் ஶ்ரீராம நாமம் ஜபித்திடும் ஶ்ரீராமதாசனை
ரகுபதி பிரியனை தினம்நினை மனமே
No comments:
Post a Comment