Tuesday, March 20, 2012

யாருக்கு மாலை இடுவாள் பார்க்கடல் பெற்ற பைங்கிளி


யாருக்கு நீ மாலை இடுவாய் ஶ்ரீ மஹாலக்ஷ்மி
பாற்கடல் வேந்தனின் பைங்கிளியே
அயோத்யாபுரியை ஆளும் அந்த கோசலை மைந்தன் ஶ்ரீ ராஜாராமனுக்கா
மதுராபுரியில் வளர்ந்த மாயவன் மதுரக்குழலூதும்  ஶ்ரீ முரளீ மாதவனுக்கா
யாருக்கு நீ மாலை இடுவாய் ....
பூலோக வைகுண்டமாய்  திகழும் ஶ்ரீரங்கமதில் பன்னக சயனனான ஶ்ரீ ரங்கராஜனுக்கா
திருமலைக்கு வந்து திவ்ய தரிசனம் தரும் திருமால் ஏகாந்தன் ஶ்ரீ வேங்கடேசனுக்கா
யாருக்கு நீ மாலை இடுவாய் ....
ஜகன்னாத்புரியில் நின்று பூரிக்கவைக்கும் ஜகத் ரக்ஷகன் ஶ்ரீ ஜகன்நாதனுக்கா
பத்ராசலமதில்  பக்தனுக்கு அருளவே வந்த பரந்தாமனான ஶ்ரீ கோதண்ட ராமனுக்கா
யாருக்கு நீ மாலை இடுவாய் ....
குருவாயூரில் குழந்தை போல் வந்தெங்கள் குறைகளை தீர்த்து வைக்கும் ஶ்ரீ கோவிந்தனுக்கா
தட்ஷிணத்வாரகையில்  உற்சாகமாய் நிற்கும் தர்மசீலன் எங்கள் ஶ்ரீ ராஜகோபாலனுக்கா
யாருக்கு நீ மாலை இடுவாய் ....
திருக்குடந்தை க்ஷேத்ரமதில் வந்து பரிபாலனம் செய்யும் ஶ்ரீ சாரங்கபாணி b  க்கா
மூவுலகும் காத்தருளும் திருமால் ஆயிரம் நாமம் உடைய ஶ்ரீமன்  நாராயணனுக்கா  
யாருக்கு நீ மாலை இடுவாய் ....



3 comments:

  1. யாருக்கு மாலை இட்டாலும் அது ஒருவனையே சேரும் அல்லவா?
    படிக்க சுவையாக இருந்தது.இன்னும் பல இடங்களில் குடி கொண்டிருக்கும் பரந்தாமனின் ஞாபகமும் வந்தது!! .

    ReplyDelete
  2. padika ananthamaka ullathu innun padika thondukirathu

    ReplyDelete