Wednesday, March 14, 2012

இராமாயண மஹிமையின் கதை சுருக்கம்

ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் 
ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் 

தசரத மஹாராஜா செய்த யாகத்தின் பலனாய் அன்னை கோசலையின் மணிவயிற்றில் உதித்து,
ரகுகுலத்திற்கு பெருமை அளித்து,
வில்வித்தை வா ள்வித்தையில் தேர்ந்து,
விஶ்வாமித்ர முனிவரின் யாகத்தை காத்து நின்று,
அகலிகைக்கு சாபவிமோசனமளித்து,
ஜனக நகர் சென்று,
சிவ தனுசை வளைத்தொடித்து,
நங்கை சீதையை கை பற்றி,
சிற்றன்னை கைகேயின் ஆணையால் மரவுரி மான்தோல் தரித்து,
மனையாள் சீதை சகோதரன் லக்ஷ்மணுடன் கானகம் சென்று,
குஹனின் அன்பான உதவியால் கங்கையை கடந்து,
சித்திரகூடம்தனில் தங்கி,
பரதனுக்கு பாதுகையை அளித்து,
ராஜ்யத்தை ஆளச்செய்து,
அகஸ்தியரை தரிசித்து,
பஞ்சவடி சென்று,
அங்கு வந்த அரக்கி சூர்பணகையின் மூக்கை அறுக்கவைத்து,
மாய மானான மாரீசனை கொன்று,
சீதையை பிறிந்து மனம் தளர்ந்து,
ஜடாயு செய்த உதவிக்கு நன்றி கூறி அதற்கு மோக்ஷம் அளித்து,
ஸபரியை ஆசிர்வதித்து,
அனுமனைக் கண்டு,
சுக்ரீவனுடன் நட்பு கொண்டு,
வாலியை வதைத்து,
அனுமனுக்கு அனுக்ரஹ பலமளித்து,
விளையாட்டாக கடலை தாண்ட செய்து,
அஸோக வனம்தனில் அமர்ந்துருந்த சீதையிடம் கனையாழியை கொடுக்கவைத்து,
ராவணனை கண்டு லங்கைக்கு தீயிட்டு வந்த அனுமனிடமிருந்து,
சீதை கொடுத்தனுப்பிய சூடாமணியை பெற்றுகொண்டு,
அலைகடலில் அணைகட்டி பரிவாரங்க ளுடன் லங்கை சென்று,
ராவணனை வென்று வதைத்து,
விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்துவிட்டு,
அன்பு சீதைக்கு அக்னிதேவனின் ஆசியை பெற்று கொடுத்து,
ஆருயிர் சீதை ஆசை லக்ஷ்மண் தாசன் அனுமனுடன் நந்திக்ராமம் சென்று,
அங்கு காத்திருந்த பரதனை அணைத்துகொண்டு,
யாவரும் அயோத்தி திரும்பி,
அங்கு கூடியிருந்த ஜனங்களுக்கு ஆசிகள் வழங்கிவிட்டு,
அன்பு தாயார்களின் பொற்பாதங்களில் தலை வைத்து வணங்கி,
அனுமன் தாங்கிய அரியணையில் அமர்ந்து,
மணிமகுடம் ஏற்றுகொண்ட
மஹானுபாவன் ஶ்ரீராமபிரானை
நான் தாளும் தடக்கையும் கூப்பி வணங்கி பஜிக்கிறேன். 
ஶ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் ஶ்ரீ ராம் ஜய ராம் ஸீதா ராம் ஶ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் ஶ்ரீ ராம் ஜய ராம் ஸீதா ராம்

11 comments:

  1. அருமையான ஆரம்பம்.ரத்னா சுருக்கமாக ஸ்ரீமத் இராமாயண காவ்யத்தை அழகான சில வரிகளில் கொண்டு வந்த நேர்த்தி ச்லாகிக்க வேண்டிய விஷயம்.
    மேன் மேலும் சிறப்பான விஷயங்களை எழுதி எங்களை மகிழ்விப்பீர்கள் என்று நம்புகிறேன்.வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நமஸ்காரம். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் கமெண்ட்ஸ் என்னை மேலும் எழுதி அனுப்ப ஊக்கபடுத்துகிறது.

      Delete
  2. Kp gave me your link and you started off great! You have coined the words very well to bring out the essence of Ramayanam. I remembered Bhaavayaami Raghuraamam. All the very best and keep sharing!

    ReplyDelete
    Replies
    1. Thank you Padmaja for your gracious appreciation. I am encouraged to post more.

      Delete
  3. Very Happy to see your blog has commenced. Hopefully, we will now see online many more of your tamil articles and stories. Now the world will see what you have been writing (and not publishing) for many years. Looking forward to much more, after this great start with a "one-page-ramayanam".

    dus_la

    ReplyDelete
  4. Very proud of you and your writings. Hope to see all your poems, articles and stories very soon.

    ReplyDelete
  5. Excellent. But this font color and back ground is giving pain for eyes.

    T. Panimalarmangai

    ReplyDelete
  6. நீங்கள் ப்ளாகில் எழுதிய பெருமாளை பற்றிய பாடல்கள் அனைத்தையும் படித்து பார்த்தேன் , மிகவும் நன்றாக இருந்தன , தவறு ஏதும் இல்லை. இதே போல் பெருமாளை பற்றிய பாடல்களை தொடர்ந்து எழுதி எல்லோரையும் திருப்தி படுத்தவும் .
    -
    சரண் , பாபு , அம்புலு , சுதா .

    ReplyDelete