Thursday, August 29, 2013

மங்களம்

ஆடல் அரசனுக்கு ஜெய மங்களம் அந்த அம்பலவாணனுக்கு சுப மங்களம்             

தேவர்முனிவர்பணியும் தியாகேசனுக்கு தேவி மீனாட்ஷியைமணந்த சுந்தரேசனுக்கு
ஆடல் அரசனுக்கு ஜெயமங்களம் அந்த அம்பலவாணனுக்கு சுப மங்களம்

கனகசபையில் ஆடும்நடராஜனுக்கு காமாட்ஷிநேயன் ஏகாம்ரேசனுக்கு
ஆடல் அரசனுக்கு ஜெயமங்களம் அந்த அம்பலவாணனுக்கு சுபமங்களம்

ஜெயமங்களம் நித்ய சுப மங்களம் ஜெயமங்களம் நித்ய சுபமங்களம்   

அஞ்சனா புத்ரன்

அஞ்சனாபுத்ரா சுந்தரரூபா ஆஞ்சனேயா நமோநமோ                                                  
வாயுகுமாரா வானரவீரா வரப்பிரசாதீ  நமோநமோ                                                              
ராமதூதா சீதாசகாயா ரகுபதிபிரியா நமோமோ                                                      
அஞ்சனாபுத்ரா சுந்தரரூபா ஆஞ்சனேயா நமோநமோ                                                    
வஜ்ரதேகா இலங்காதகனா விஸ்வரூபா நமோநமோ                                                        
பராக்கிரமா சிரஞ்சீவீ பரதசகாயா நமோநமோ                                                          
அஞ்சனாபுத்ரா சுந்தரரூபா ஆஞ்சனேயா நமோநமோ                                          
ஆஞ்சனேயா நமோநமோ  ஆஞ்சனேயா நமோநமோ

கண்ணனுடன் கோலாட்டம் ஆடுவோம்

கும்மியடித்து குதூகலித்தே நாமும் கோலாட்டமாடியே கொண்டாடுவோம்             

கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய் நம் கண்ணனைபோற்றுவம் ஆனந்தமாய்          
அகிலத்தை ஆண்டிடும் மோகனரூபனை ஆயனைப்போல்வந்த கோவிந்தனை        
மண்ணை அள்ளித்தின்ற மாயவனை உறி வெண்ணை திருடி உண்டபாலகனை            
கும்மி அடித்து குதூகலித்தேநாமும் கோலாட்டமாடியே கொண்டாடுவோம்              

கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய் நம் கண்ணனைபோற்றுவோம் ஆனந்தமாய்  
காளிங்கன்மேல்நடம் செய்தவனை பல கன்னியர் உடைகளை மறைத்தவனை    
வண்ணக்குழல் ஊதும் மேகநிறத்தானை எண்ணிலடங்கா வித்தைகள் செய்தவனை      
கும்மியடித்து குதூகலித்தேநாமும் கோலாட்டமாடியே கொண்டாடுவோம்        

கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய் நம் கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய்      
நம் கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய் நம் கண்ணனை போற்றுவோம் ஆனந்தமாய்