கலியுகதெய்வமாய் கல்யாணவரதன்
காட்க்ஷி அளிப்பது மஹாதேவியில்
காட்க்ஷி அளிப்பது மஹாதேவியில்
கல்யாணமஹாதேவியில்
நம் கல்யாணமஹாதேவியில்
நம் கல்யாணமஹாதேவியில்
திருமுகபொலிவும் மலர்ந்த கண்களுமாய்
திவ்ய தரிசனம்தரும் வேங்கடவரதன்
(கலியுகதெய்வமாய் ...)
பாண்டவஆறும் பல சோலைகளும் நிறைந்து
பாங்காய் அமைந்த பொற்கோயில்தனிலே
ஈடில்லா அழகுடைய பூமிநீளா சமேதரராய்
நாடி வருவோர்க்கு பலநன்மைகள்செய்திட
(கலியுக தெய்வமாய் ...)