Wednesday, April 25, 2012

கிளி ஜோசியம்

கிளி ஜோசியம் பார்க்கும் என்னை கிருக்கன் என்பார். அது மூடநம்பிக்கை என்றும் பலர் கூறுவார்கள். 
ஆவலுடன் நாம் குறி கேட்கும் பொழுதுதான், அந்தக்கிளிக்கு ஒரு நிமிட சுதந்திரமும், அது கொரிப்பதற்கு ஒரு நெல்லும் கிடைக்கிறது என்பதை, நீங்கள் மறந்து விடாதீர்கள். என்றும் உங்களுக்காக காத்திருக்கிறது அந்தக்கிளி. 

முருகனின் பல ரூபங்கள்

முருகன் - அவனுக்குத்தான் எத்தனை ரூபங்கள் 
சிறு குழந்தைகளுக்கு அவன் குமரனாகவும் 
இளைஞர்களுக்கு அவன் சிங்காரவேலனாகவும் 
கலைஞர்களுக்கு அவன் ஸ்கந்தனாகவும் 
வீரர்களுக்கு அவன் வேலாயுதனாகவும் 
இல்லறதோற்கு வள்ளி தேவயானையுடன் சுப்ரமண்யனாகவும் 
உபதேசம் வேண்டுவோர்க்கு சுவாமினாதனாகவும் 
துறவிகளுக்கு அவன் பழணிஆண்டவனாகவும் 
மேலும் பல ரூபங்களில் நமக்கு வழித்துணை வருவான் திருத்தனி முருகன்  

Monday, April 23, 2012

வரலக்ஷ்மி நீ வந்தருள்வாய்


வரலக்ஷ்மி  நீ வந்தருள்வாய் - வந்தெம் இல்லத்தில் தங்கிடுவாய் 
அருளோடு ஆசியும் தந்தடுவாய் - அறியாமை அண்டாமல் செய்திடுவாய் 
இல்லத்தில் ஒளியாய் திகழ்ந்திடுவாய் - இல்லாமை இல்லாமல் செய்திடுவாய் 
கவசமாய் எங்களை காத்திடுவாய் - கருணையே வெள்ளமாய் பொழிந்திடுவாய்          
பரிவோடு  எங்களை பார்த்திடுவாய் - பார் புகழ் கீர்த்தியை தந்திடுவாய் 
வறுமை இல்லா நிலை அளித்திடுவாய் - விளக்கின் சுடறாய் வந்திடுவாய் 
அடியாரை அன்புடன் ஆதரிப்பாய் - ஆசனாய் அறிவுரை தந்திடுவாய் 
வரலக்ஷ்மி  நீ வந்தருள்வாய் - ஶ்ரீவரலக்ஷ்மி நீ வந்தருள்வாய்

வருவாய் வருவாய் வாயுகுமாரா

வருவாய் வருவாய் வாயுகுமாரா
வந்து நற்செய்தியை கூறுவாயே  
வருவாய்.... 
தருவாய் ஆறுதல் தசரத தனயனுக்கு 
தரணியை காத்திடும் சீதாராமனுக்கு 
வருவாய்.... 
அண்டமெல்லாம் அதிர நீ செய்தசெயலை 
அசோகவனம் தனில் நீ கண்டகாட்ஷியை 
கண்டேன் கண்டேன் சீதையை நான் என்று 
களிப்புடன் நீ அந்த ராகவனுக்கு கூறிட 
வருவாய்...

ஓடி ஓடி வா


ஓடி ஓடி வா - ஓடி ஓடி வா - ஓடி ஓடி வா - எங்கள் வீர மணிகண்டா
ஆடி ஆடி வா - ஆடி ஆடி வா - ஆடி ஆடி வா - எங்கள் ஆசை மணிகண்டா
நாடி நாடி வா - நாடி நாடி வா - நாடி நாடி வா - எங்கள் நேச மணிகண்டா
கூடி கூடி வா - கூடி கூடி வா - கூடி கூடி வா - எங்கள் சூர மணிகண்டா  
தேடி தேடி வா - தேடி தேடி வா - தேடி தேடி வா - எங்கள் தீர மணிகண்டா  
பாடி பாடி வா - பாடி பாடி வா - பாடி பாடி வா - எங்கள் பால மணிகண்டா

ஐயனே சரணம் அப்பனே சரணம்

ஐயனே சரணம் அப்பனே சரணம் 
ஹரிஹர சுதனே சரணம் சரணம்
அழகா சரணம் அற்புதா சரணம் 
அன்னதான பிரபு சரணம் சரணம் 
உன்னதா சரணம் உத்தமா சரணம் 
ஓம்காரரூபா சரணம் சரணம் 
சத்குரு சரணம் ஜோதியே சரணம் 
சபரிகிரீஸா சரணம் சரணம் 
சபரிகிரீஸா சரணம் சரணம் 

Friday, April 20, 2012

அலைமகள் கலைமகள் மலைமகள்


அலைமகளே எங்கள் அலைமகளே 
அருளும் பொருளும் தருபவளே 
கலைமகளே எங்கள் கலைமகளே 
கல்வியும் கலையும் தருபவளே 
மலைமகளே எங்கள் மலைமகளே 
வீரமும் தீரமும் தருபவளே 
அலைமகள் கலைமகள் மலைமகளை 
அனுதினம் துதிப்போம் அன்புடனே  

எனக்கருள தருணம் இதம்மா

எனக்கருள தருணம் இதம்மா 
எனதருள் தேவியே சங்கரியே 
எனக்கருள.... 
உன்னையே நினைந்து அனுதினமும் - நான் 
உருகுகிறேனே தயைபுரிவாயே 
எனக்கருள.... 
அன்புடனே உன்தன் சன்நிதியில் வந்து 
அமர்ந்து அர்ச்சனைகள் செய்வேனே 
அகிலமெல்லாம் காப்பவளே தேவி 
அகிலாண்டேஸ்வரியே தாயே 
எனக்கருள....' 

பங்கஜவாஸினி ஶ்ரீசரஸ்வதி

பங்கஜவாஸினி ஶ்ரீசரஸ்வதி - பக்தர்கருளும் ஶ்ரீசரஸ்வதி 
நங்கையர் துதிக்கும் ஶ்ரீசரஸ்வதி - நலங்களை அருளும் ஶ்ரீசரஸ்வதி 
தாமரையில் அமர்ந்த ஶ்ரீசரஸ்வதி - தஞ்சம் அடைந்தோம் ஶ்ரீசரஸ்வதி 
வீணையை ஏந்திய ஶ்ரீசரஸ்வதி - வேண்டும் வரம்தரும் ஶ்ரீசரஸ்வதி 
கல்விக்கு அதிபதியே ஶ்ரீசரஸ்வதி - காத்தருள்வாயே ஶ்ரீசரஸ்வதி                 
மனதார வேண்டினோம் ஶ்ரீசரஸ்வதி - மங்களங்கள் தருவாய் ஶ்ரீசரஸ்வதி 
பங்கஜவாஸினி ஶ்ரீசரஸ்வதி ... சரஸ்வதி ...

Tuesday, April 17, 2012

திருவரங்கத்து ஆனந்தம்


அரங்கம் என்றாலே ஆனந்தமே - திரு 
அரங்கத்தில் காண்பதெல்லாம் பேரின்பமே 
நால்வகை வேதங்கள் ஓதும் அந்தணர்கள் 
நிறைந்த நான்முகனைப்படைத்த ஶீதரன் - பள்ளிகொண்ட 
அரங்கம் என்றாலே ஆனந்தமே... 

அலைஅடித்தோடும் அகண்டகாவிரிகளும் 
கரையில் குலைகள் நிறைந்த இனியவாழைமரங்களும் 
பூஞ்சோலைகளும் பொய்கையில் தாமரையும்நிறைந்து 
நீலவண்ணனான எங்கள் ரங்கன் - பள்ளிகொண்ட 
அரங்கம் என்றாலே ஆனந்தமே... 

வெண்ணைதிருடி உண்ட வடமதுரை கள்வன் நப்   
பின்னையின் மனம் கவர்ந்த மாயவன் அங்கு 
கண்ணை பறிக்கும் பேரழகுடனே கனக மணி
வண்ணனாய் அனந்தன்மேல் - பள்ளிகொண்ட 
அரங்கம் என்றாலே ஆனந்தமே.... 

கூடகோபுரமும் மாடமாளிகையும் நிறைந்து 
குறையில்லா செல்வமுடன் என்றும் விளங்கிடும் 
தும்புரு நாரதரும் இனிய இசைஇசைக்க 
தாய் யஸோதையால் கட்டுண்டதாமோதரன்- பள்ளிகொண்ட 
அரங்கம் என்றாலே ஆனந்தமே ...

ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தமே

(ShivaVishnu Temple of South Florida)

ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தமே 
தென்பூவக ஆலயத்தின் அற்புத தரிசனம்
ஆனந்தம் ஆனந்தம்பேரானந்தமே....  
நந்தியையும் கருடரையும் நேர்த்தியுடன்வேண்டி
ஆதிமுதல் கேதுவரைஅனைத்துகிரகமும் சுற்றிவந்தது 
ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தமே..... 
ஐங்கரனையும் ஐயப்பனையும் மெய்சிலிர்க்க வேண்டி
வள்ளி தேவயானையுடன் வடிவேலனையும் நமஸ்கரித்து 
காஞ்சிபுரநாயகி ஶ்ரீகாமாட்ஷியை வணங்கிவிட்டு 
கலைகளுக்கதிபதியாம் ஶ்ரீசரஸ்வதியின் தாள்பணிந்தது 
ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தமே.... 
பாற்கடலில் உதித்த ஶ்ரீலஷ்மியை தரிசித்து
சூடிக்கொடுத்தசுடர்கொடி ஶ்ரீஆண்டாளையும்சேவித்து 
பண்டரீ நாதரையும் ஶ்ரீபத்ராஜல ராமரையும் 
அஞ்சாநெஞ்சன் தாஸன் அனுமனையும் வணங்கியது 
ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தமே..... 
அலங்காரப்பிரியரான ஶ்ரீவெங்கடேசனின் தாள்பணிந்து 
அபிஷேகப்பிரியரான சிவபெருமானையும் துதித்து
கோடி ஜன்ம பாபம் தீர குறையெல்லாம் மறைந்திடவே  
கூடி அர்ச்சனை செய்து நாமும் பாடிமகிழ்ந்திடுவோமே 
ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தமே.... 

Monday, April 16, 2012

ரம்யமான பெருமாள்

ரம்யமான பெருமாள் எங்கள் ராஜகோபாலத்திருமால் 
ஹரித்திரா நதிக்கரையில் அமைந்த அழகான பொற் கோயிலில் 
மாடுமேய்க்கும் கோலமுடன் நீ மந்தஹாச புன்னகையுமாய் நிற்கும்
ரம்யமான பெருமாள் ...         
காணக்கிடைக்காத கருடசேவையும் கண்ணை பறிக்கும் உன் அலங்காரமும் 
கனவோ - இது என்று நினைக்க கண்படுமோ என்று தோன்றிட 
தட்ஷிண துவாரகைக்கு வந்து நீ தரிசனம் அளிக்கும் எங்கள் 
கோபாலனே - ராஜ கோபாலனே - ஸந்தானகோபாலனே 
உனைக்காண கண்கோடி வேண்டுமப்பா 
ரம்யமான பெருமாள் ...

Friday, April 6, 2012

கூவி அழைப்பாயே

கூவி அழைப்பாயே என் உள்ளம் கவர்ந்த
மாயவன் மறைந்திருக்கும் இடம் நோக்கி - நீ கூவி அழைப்பாயே ...

அழகிய மயில் ஆடும் சோலை தனிலே - மிக
அமுதமாய் இசைபாடும் கரும் குயிலே - நீ கூவி அழைப்பாயே ...

பசும் கிளி நிறமுடைய ஶீதரனின்
பிரிவால் நான் படும் வேதனையை கூறி - நீகூவி அழைப்பாயே ...

மெல்லிய நடை போட்டு அன்னங்கள் அசைந்தாடும் - ஶ்ரீ
வில்லிப்புத் தூருக்கவரை வரச்சொல்லி - நீ கூவி அழைப்பாயே...

திருவரங்கத்தில் நான் கண்டேன்

கண்டேன் கண்டேன் காணக்கிடைக்காத கருணை வள்ளலை திருவரங்கத்தில் - நான் 
அடியாரின் மனமதில் அமுதமாய் இனித்திடும் அந்த ரங்கன் பள்ளிகொண்ட கோலத்தை - நான் 
கண்டேன் கண்டேன்.. 
பூலோக வைகுண்டமான புண்ணிய பூமியில் மாலோலன் அந்த வடமதுரை மாயவன் 
மன்மத ரூபனாய் காட்ஷி அளிக்கும் அழகில் மயங்கியே என்தன் கவலையை மறந்து - நான் 
கண்டேன் கண்டேன் ...

அரஹரோஹரா

சிவகாமி பாலனுக்கு அரஹரோஹரா 
சிங்கார வேலனுக்கு அரஹரோஹரா 
மகேசன் மைந்தனுக்கு அரஹரோஹரா 
மன்மத ரூபனுக்கு அரஹரோஹரா 
அறுபடை முருகனுக்கு அரஹரோஹர 
ஆறுமுக வேலனுக்கு அரஹரோஹரா 
குரவள்ளி நாதனுக்லகு அரஹரோஹரா 
சூரசம்ஹாரனுக்கு அரஹரோஹரா 
அரஹரோஹரா அரஹரோஹரா
அரஹரோஹரா அரஹரோஹரா

Tuesday, April 3, 2012

மால்மருகா

வேலோடும் மயிலோடும் விளையாடும் மால்மருகா 
வில்லொத்த கண்ணழகா குரவள்ளி மனவாளா 
வேலோடும் மயிலோடும் ...

அழகனாய் குமரனாய் சிங்கார வேலனாய் 
அன்னை அபிராமிமகிழ் பாலசுப்ரமண்யனாய் 
வேலோடும் மயிலோடும் ... 

அறுபடை வீடுதனில் ஆனந்தமாய் நின்று கொண்டு 
அன்பர்கபயம் அளித்திடும் ஆறுமுக தெய்வமுமாய் 
சேவற்கொடியோனாய் சோலைமலை குமரனுமாய் 
கார்த்திகேயனாய் கலியுக வரதனுமாய் நின்று
வேலோடும் மயிலோடும் ...

Monday, April 2, 2012

எங்கும் இருப்பான் கண்ணன்

அன்பு நிறைந்த உள்ளத்தில் நீ இருப்பாய் கண்ணா  
அமைதி தரும் எண்ணத்தில் நீ இருப்பாய்        


கனவில் வரும் முகத்தில் நீ இருப்பாய்  கண்ணா  
காற்றில் வரும் கீதத்தில் நீ இருப்பாய்           


மனதில் வரும் நினைவில் நீ இருப்பாய்  கண்ணா  
மாறி வரும் காலத்திலும் நீ  இருப்பாய்        
ஒன்றும் அறியாகுழந்தை போல் நீ இருப்பாய் கண்ணா 
என்றும் எங்கள் உள்ளத்தில் நீ இருப்பாய்  

ஶ்ரீராமதாஸனை சிந்தனை செய்திடுவாய்

சிந்தனை செய்திடுவாய் மனமே - ஶ்ரீராமதாஸனை 
வந்திடும் சங்கடங்கள் விலகிடவே - என்றும் நீ
சிந்தனை செய்திடுவாய் ...

தஞ்சம் அடைந்தோரை வஞ்சனையின்றி காக்கும் 
அஞ்சனை மைந்தனை என்றும் மறவாமல் நீ 
சிந்தனை செய்திடுவாய் ...

ஆதவனை கனியென்று நினைத்து பிடிக்கசென்ற 
ஆஜானுபாவன் அந்த அற்புத குணசீலன் 
சஞ்சீவி மலையை சாகசமாகவே தூக்கிய 
சிரஞ்சீவியான கேசரி நன்தனை மனதில் நீ 
சிந்தனை செய்திடுவாய் ...

சரஸ்வதி சாம்பவி

சரஸ்வதி சாம்பவி சந்திரவதனி சுந்தரி சாகரீ சரணம் அம்மா - வாணி 
(சரஸ்வதி ...)
வெள்ளைதாமரையில் அமர்ந்த தேவி சொல்லை செயலாக்கும் அற்புதத்தை தா 
(சரஸ்வதி ...)
கல்லும்கனிந்துறுக எனக்கு கவி பாடும் திறன் தறுவாயே தேவி 
வீணை ஒலிக்கு ஆதாரமானவளே வித்யாதாரிணியே வாணி 
சிந்தைதனில் நின்று எங்கள் சித்தம் தெளிவாக்கு வாயே வேணி 
முந்தைபிறவி துயர்களையெல்லாம் நீ முற்றும் போக்குவாய் தாயே 
(சரஸ்வதி ...)