Friday, March 23, 2012

மங்களமூர்த்தி

ஜய ஜய தேவா மங்களமூர்த்தி கௌரிபுத்ரா நமோ நமோ       
ஜய ஜய தேவா வக்ரதுண்டா சங்கரபாலா   நமோ நமோ       
ஜய ஜய தேவா மோதகப்பிரியா ராகவன்மருகா நமோ நமோ   
ஜய ஜய தேவா லம்போதரா வேலவன்சோதரா நமோ நமோ 
ஜய ஜய தேவா கஜவதனா விக்னவிநாயக நமோ நமோ           
விக்னவிநாயக நமோ நமோ விக்னவிநாயக நமோ நமோ

பிழைக்கத்தெரிந்தவன்

இரண்டு வழிப்போக்கர்கள் காட்டுவழியே  போய்கொண்டிருந்தனர். ஒரு இடத்தில் புலி உருமும் சப்தம் கேட்டது. இருவரும் ஓடத்தயாராக வேண்டும், என்று எச்சரித்த ஒருவன், ஓடத்தயாரானான். மற்றவனோ 'ஏ முட்டாளே, புலியை விட வேகமாக நம்மால் ஓடமுடியுமா'? அதன்திறமை  நமக்கேது என்றான். முதலாமவன், 'உண்மை தான். புலியைவிட வேகமாக ஓடாவிட்டாலும், உன்னை விட வேகமாக நான் ஓடினால் நான் பிழைத்துக்கொள்வேன் அல்லவா', என்று கூறி ஓட ஆரம்பித்தான். 
திறமை இல்லாவிட்டாலும் சாமர்த்தியம் உள்ளவன் பிழைத்துக்கொள்வான்.

Tuesday, March 20, 2012

யாருக்கு மாலை இடுவாள் பார்க்கடல் பெற்ற பைங்கிளி


யாருக்கு நீ மாலை இடுவாய் ஶ்ரீ மஹாலக்ஷ்மி
பாற்கடல் வேந்தனின் பைங்கிளியே
அயோத்யாபுரியை ஆளும் அந்த கோசலை மைந்தன் ஶ்ரீ ராஜாராமனுக்கா
மதுராபுரியில் வளர்ந்த மாயவன் மதுரக்குழலூதும்  ஶ்ரீ முரளீ மாதவனுக்கா
யாருக்கு நீ மாலை இடுவாய் ....
பூலோக வைகுண்டமாய்  திகழும் ஶ்ரீரங்கமதில் பன்னக சயனனான ஶ்ரீ ரங்கராஜனுக்கா
திருமலைக்கு வந்து திவ்ய தரிசனம் தரும் திருமால் ஏகாந்தன் ஶ்ரீ வேங்கடேசனுக்கா
யாருக்கு நீ மாலை இடுவாய் ....
ஜகன்னாத்புரியில் நின்று பூரிக்கவைக்கும் ஜகத் ரக்ஷகன் ஶ்ரீ ஜகன்நாதனுக்கா
பத்ராசலமதில்  பக்தனுக்கு அருளவே வந்த பரந்தாமனான ஶ்ரீ கோதண்ட ராமனுக்கா
யாருக்கு நீ மாலை இடுவாய் ....
குருவாயூரில் குழந்தை போல் வந்தெங்கள் குறைகளை தீர்த்து வைக்கும் ஶ்ரீ கோவிந்தனுக்கா
தட்ஷிணத்வாரகையில்  உற்சாகமாய் நிற்கும் தர்மசீலன் எங்கள் ஶ்ரீ ராஜகோபாலனுக்கா
யாருக்கு நீ மாலை இடுவாய் ....
திருக்குடந்தை க்ஷேத்ரமதில் வந்து பரிபாலனம் செய்யும் ஶ்ரீ சாரங்கபாணி b  க்கா
மூவுலகும் காத்தருளும் திருமால் ஆயிரம் நாமம் உடைய ஶ்ரீமன்  நாராயணனுக்கா  
யாருக்கு நீ மாலை இடுவாய் ....



Friday, March 16, 2012

மூலாதார மூர்த்தியே சரணம்



மூலாதார மூர்தியே முக்கண்ணன் மைந்தனே
கார்திகேயன் ஸோதரனே கருணை வடிவானவனே
மாங்கனியை வென்றவனே மாசுமரு அற்றவனே
மோதக பிரியனே மோஹனமானவனே
யானை முகத்தானே யாவரையும் காத்தருள்வாய்
நாயகனே ... விநாயகனே ... ஸித்திவிநாயகனே
சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம்

Wednesday, March 14, 2012

இராமாயண மஹிமையின் கதை சுருக்கம்

ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் 
ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் ஶ்ரீராமஜயம் 

தசரத மஹாராஜா செய்த யாகத்தின் பலனாய் அன்னை கோசலையின் மணிவயிற்றில் உதித்து,
ரகுகுலத்திற்கு பெருமை அளித்து,
வில்வித்தை வா ள்வித்தையில் தேர்ந்து,
விஶ்வாமித்ர முனிவரின் யாகத்தை காத்து நின்று,
அகலிகைக்கு சாபவிமோசனமளித்து,
ஜனக நகர் சென்று,
சிவ தனுசை வளைத்தொடித்து,
நங்கை சீதையை கை பற்றி,
சிற்றன்னை கைகேயின் ஆணையால் மரவுரி மான்தோல் தரித்து,
மனையாள் சீதை சகோதரன் லக்ஷ்மணுடன் கானகம் சென்று,
குஹனின் அன்பான உதவியால் கங்கையை கடந்து,
சித்திரகூடம்தனில் தங்கி,
பரதனுக்கு பாதுகையை அளித்து,
ராஜ்யத்தை ஆளச்செய்து,
அகஸ்தியரை தரிசித்து,
பஞ்சவடி சென்று,
அங்கு வந்த அரக்கி சூர்பணகையின் மூக்கை அறுக்கவைத்து,
மாய மானான மாரீசனை கொன்று,
சீதையை பிறிந்து மனம் தளர்ந்து,
ஜடாயு செய்த உதவிக்கு நன்றி கூறி அதற்கு மோக்ஷம் அளித்து,
ஸபரியை ஆசிர்வதித்து,
அனுமனைக் கண்டு,
சுக்ரீவனுடன் நட்பு கொண்டு,
வாலியை வதைத்து,
அனுமனுக்கு அனுக்ரஹ பலமளித்து,
விளையாட்டாக கடலை தாண்ட செய்து,
அஸோக வனம்தனில் அமர்ந்துருந்த சீதையிடம் கனையாழியை கொடுக்கவைத்து,
ராவணனை கண்டு லங்கைக்கு தீயிட்டு வந்த அனுமனிடமிருந்து,
சீதை கொடுத்தனுப்பிய சூடாமணியை பெற்றுகொண்டு,
அலைகடலில் அணைகட்டி பரிவாரங்க ளுடன் லங்கை சென்று,
ராவணனை வென்று வதைத்து,
விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்துவிட்டு,
அன்பு சீதைக்கு அக்னிதேவனின் ஆசியை பெற்று கொடுத்து,
ஆருயிர் சீதை ஆசை லக்ஷ்மண் தாசன் அனுமனுடன் நந்திக்ராமம் சென்று,
அங்கு காத்திருந்த பரதனை அணைத்துகொண்டு,
யாவரும் அயோத்தி திரும்பி,
அங்கு கூடியிருந்த ஜனங்களுக்கு ஆசிகள் வழங்கிவிட்டு,
அன்பு தாயார்களின் பொற்பாதங்களில் தலை வைத்து வணங்கி,
அனுமன் தாங்கிய அரியணையில் அமர்ந்து,
மணிமகுடம் ஏற்றுகொண்ட
மஹானுபாவன் ஶ்ரீராமபிரானை
நான் தாளும் தடக்கையும் கூப்பி வணங்கி பஜிக்கிறேன். 
ஶ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் ஶ்ரீ ராம் ஜய ராம் ஸீதா ராம் ஶ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் ஶ்ரீ ராம் ஜய ராம் ஸீதா ராம்